Sunday, July 24, 2016

மருத்துவம் தெரியாது

எங்களுக்கு மருத்துவம் தெரியாது!

கர்ப்பகாலத்தை நோயுற்றகாலமாக மாற்றி பிரசவத்திற்கு பின் தாயையும்,சேயையும் நிரந்தர நோயாளிகளாக ஆக்குவதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

தடுப்பூசி என்ற பெயரில் நோய்கிருமிகளையும், இருப்பு ரசாயனங்களையும் உடலில் செலுத்துவதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

நுரையீரலில் தங்கிய கழிவை,சளியாக மாற்றி உடல் வெளியேற்ற முயற்சிப்பதை ரசாயனமருந்துகளை கொடுத்து அந்த கழிவை தேங்கவைத்து நாள்பட்ட நோய்களாக மாற்றுவதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

ஆண்டிப்பட்டி மனிதருக்கும்,அமெரிக்க மனிதருக்கும்,
சைவ உணவு சாப்பிடுபவருக்கும்,அசைவ உணவு சாப்பிடுபவருக்கும், வெய்யிலில் கடினமாக உழைப்பவருக்கும், ஏ.சியில் சொகுசாக அமர்ந்திருப்பவருக்கும் இரத்தத்தில்சர்க்கரையும், இருதயத்தில் அழுத்தமும் இன்னும் பிறவும் சராசரியாக இவ்வளவுதான் இருக்கவேண்டும், எல்லோரும்ம் சராசரியாக இவ்வளவுதான் நீர் பருக வேண்டும். எல்லோரும் சராசரியாக இவ்வளவுதான் உண்ண வேண்டும் என சராசரிபட்டியல் நீட்டுவது மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

எந்த நோயையும் குணபடுத்த முடியாது, கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்க முடியும் என்பதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

கழிவுகளின் தேக்கத்தால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை சரிசெய்ய வழிதெரியாமல் அந்த உறுப்பையே அறுத்து எறிவதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

ஒரு உயிரை கொலை செய்து உடல் உறுப்புகளை களவாடி விற்பனை செய்து பணம் பறிப்பதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு கைக்கூலியாய் செயல்பட்டு, தன்னாட்டு மக்களை ஏமாற்றி, பொய்யுரைத்து, இம்சித்து, வேதனைபடுத்தி,செல்வத்தை களவாடுவதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

எந்த ஒரு விளைவிற்கும் எதிர்விளைவு இருக்கும்,உண்மைதான்!. ஆனால் அந்த விளைவு(பக்க விளைவு) தீங்காவே இருக்கும்,அதனால் உடலில் புதுப்புது நோய்கள் வரும் என்பது மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

“பிறப்பும்,இறப்பும் நம் கையில் இல்லை” இது ஊரறிந்த உண்மை, ஆனால் மரணத்தை முன்னிறுத்தி விளம்பரங்கள் மூலம் மக்களை பயமுறுத்தி அவர்களை நோயாளி ஆக்குவது மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

No comments:

Post a Comment