Wednesday, April 29, 2015

சர்க்கரை நோய் - ஒரே மாதத்தில் விரட்ட வழி

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்


வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ


தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சவும். 


பின்பு வடிகட்டி மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரம் முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். 


சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட செய்து உறுதி செய்யுங்களேன்.

கட-உள்

எல்லையற்ற பரம்பொருளை
ஈடு இணை அற்றவனை
அனைத்தையும் கடந்து நிற்பவனை
நவ கோள்களுக்குள்ளே
பூமி பந்துக்குள்ளே
சிறு நாட்டுக்குள்ளே
மத கோட்டுக்குள்ளே
ஏன் சிறை வைக்க நினைக்கிறீர்கள்?

குளிப்பதும் உடலை கழுவுவதும் ஒன்றுதானா?



உண்மையில் நீங்கள் தினமும் குளிக்கிறீர்களா (அல்லது உடலை கழுவுகிறீர்களா)?

யாரை பார்த்து என்ன கேள்வி கேட்டீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் 2 முறை குளிக்கிறேன், நான் costly யான soap தான் போட்டு தினமும் இருவேளை குளிக்கிறேன், ...... இப்படி பல பதில்கள் உங்களிடம் இருந்து வரலாம். அதற்கு முன் குளியல் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
குளித்தல் என்பது குளிர்வித்தல் என்கிற சொல்லின் சுருக்கமே. குளிர்வித்தல் என்பது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் நடைபெற வேண்டும். இதனையே ஔவையார் “சனி நீராடு” என்றார்.

உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவுவது, வெளியே சென்று வந்தால் முகம் கை, கால்களை கழுவுவது போன்றதே தலைக்கு தண்ணீர் ஊற்றாமல் கழுத்திற்குக் கீழே மட்டும் தண்ணீர் ஊற்றுவது என்பதும். கழுத்திற்கு கீழ் மட்டும் தண்ணீர் ஊற்றுவது என்பது குளித்தல் ஆகாது, உடலை கழுவுதலே ஆகும். தலைக்கு தண்ணீர் ஊற்றாமல் உடலின் பிற பகுதிகளுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றும்போது உடலில் உள்ள ஒட்டுமொத்த சூடும் தலைக்கு ஏறி கேடு விளைவிக்கும். (அதில் ஒன்று தான் தலையில் பொடுகு வைப்பதும், மற்றும் பிற உடல் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும்).

தினமும் குளித்திராதவர்களுக்கு உறைந்த சளி, சுவாசத்தில் சிரமம், உடல் அசதி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்ட காலமாக குளிர்வித்தலை புறக்கணித்ததன் விளைவாக புதிதாகக் குளிக்கும்போது கழிவு வெளியேற்றம் நடைபெறும்; இதனால் ஆரம்பத்தில் உடலில் சிரமம் ஏற்படலாம். தொடர்ந்து குளித்தால் சுகத்தைப் பெறலாம். மழை பெய்கின்ற போதெல்லாம் மழைநீரில் உடல் நடுங்கும் அளவிற்கு நனைவது (குளிப்பது) உடலை வலுவாக்கும்.
“கூழானாலும் குளித்து குடி” என்பது சான்றோரின் வாக்கு. குடிப்பது கூழே ஆனாலும் குளித்தப் பின்னரே குடிக்க வேண்டும். இவ்வாக்கு மூலம் உணவருந்தும் நாட்கள் எல்லாம் உணவருந்துவதற்கு முன்பு குளித்தல் அவசியம் என்பது புலனாகிறது. (குறிப்பு: விரதம் இருக்கும் நாட்கள் வேண்டுமானால் நீங்கள் குளிக்காமல் இருந்து கொள்ளுங்கள்). அப்படியானால் குளித்தல் என்பது தினசரி நடக்கவேண்டிய ஒன்று. தினசரி உடல் முழுக்க குளிப்பவர்கள் தங்களது உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சியை பெற்று சுகத்தை பெறமுடியும்.

குளிப்பதற்கு எவ்வாறு சாதாரண நீர் உகந்ததோ அதுபோன்றே பருகுவதற்கும் சாதாரண நீரே ஏற்றது. வெந்நீர், ரசாயனங்கள் கலக்கப்பட்ட மினரல் வாட்டர் போன்றவை உடலுக்கு நலம் தருபவை அல்ல. குடிப்பதற்கும் குளிப்பதற்கும் சாதாரண நீர் அல்லது மண்பானை நீர் பயன்படுத்தலாம். மண்பானை நீரில் உடலுக்கு தேவையான உயிராற்றல் நிலைபெற்று இருக்கும்.

ஆனால் இன்றோ தலையில் தண்ணீர் படாமல் உடலை மட்டும் நனைப்பதை "சாதாரன குளியல்" என்றும் தலை நனையுமாறு குளிப்பதை "தலைக்கு குளிப்பது" என்றும் பெயர் மாற்றி கூறுகிறார்கள். நம்மவர்கள் "தலைக்கு குளிப்பது" என்று கூறுவது தான் உண்மையான "சாதாரன குளியல்".

"எண்ணை குளியல்' என்று ஒரு வகை குளியல் உள்ளது. அதாவது உடல் முழுவதும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணை தேய்த்து குறைந்தது அரை மணி நேரமாவது கழித்து குளிப்பது.

குளியலுக்கு எதை பயன்படுத்தலாம்?
சோப்பு, ஷாம்பூ – தவிர்க்க வேண்டியவை:
சோப்பு, ஷாம்பூ முதலிய ரசாயன விஷங்களை உடலில் மேல் பயன்படுத்தும்போது அவை கழிவுகள் வெளியேறுவதற்காக தோலின் மேற்பரப்பில் உள்ள மெல்லிய துளைகளை அடைத்துவிடும். அதனால் தோலின் வழியாக உடல் கழிவுகள் வெளியேறாமல் உடல் நலம் பாதிக்கும். நம் உடல் தோலின் மூலமாக கிரகிக்க கூடிய பிரபஞ்ச சக்தியை சரியாக கிரகிக்க முடியாமலும் பாதிப்புக்கு உள்ளாகும். சோப்பு, ஷாம்பூ மட்டும் அல்ல, உடலின் மேல் பயன்படுத்த கூடிய facepowder, facecream, body spray, cent, sun screen lotions, body lotion அனைத்தும் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சியக்காய், அரப்பு, பச்சைபயறு, கடலைமாவு, அரிசிமாவு, கேழ்வரகு மாவு, என எதாவது ஒன்றையோ அல்லது சிலவற்றை சேர்த்தோ பயன்படுத்தலாம்.
(சோப்பு போல நுரைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இவற்றில் ஒன்றுடன் ஒரு கிலோவிற்கு 150 gram விதம் வெந்தயத்தை சேர்த்து பயன்படுத்தலாம்)

இந்த கட்டுரை Acu Healer AjayRaja எழுதிய "நான் நலமாக இருகிறேனா?" என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவருக்கும் இந்த புத்தகத்தை வெளியிட்ட "புத்துயிர் பதிபகதிற்கும்" எனது மனமார்ந்த நன்றி

(29.04.15) – மோகினி ஏகாதசி - for those who believe

 (29.04.15) – மோகினி ஏகாதசி.

இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவரின் மனதில் உள்ள ஆழ்ந்த வேதனைகளும், துன்பங்களும், தடைகளும் நீங்கி வாழ்வில்
சுகம் பெறுவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.

ஹே யுதிஷ்டிரா !! ஒருமுறை மகரிஷி வசிஷ்டர் பிரபு ஸ்ரீராமனுக்கு கூறிய கதையினை இப்போது உனக்கு கூறுகிறேன். கவனமாகக் கேள் என்று கூறத் தொடங்கினார்.

ஒருசமயம் பிரபு ஸ்ரீராமர் மகரிஷி வசிஷ்டரிடம், குருதேவா !! ஜனகநந்தினி சீதையின் பிரிவினால் சொல்லவொணா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து விடுபடவும், அனைத்து பாவங்களையும் அழித்து மகிழ்ச்சியை அளிக்கவல்ல விரதம் ஏதேனும் இருந்தால் கூறுங்கள் என வேண்டினார்.

அதனைக் கேட்ட மகரிஷி வசிஷ்டர், ராமா !! ஆழ்ந்த அறிவாற்றலைக் கொண்டவனே !! ஜகத்தின் நன்மை கருதி நீ கேட்ட இந்த கேள்விக்கு விடையளிக்கிறேன். மோகினி ஏகாதசி விரத மகாத்மியத்தை உனக்கு கூறுகிறேன், கவனமாகக் கேள் என்று கூறத் தொடங்கினார்.

மோகினி ஏகாதசி விரத மகாத்மியத்தால் ஒரு மனிதனுடைய பாவங்களும், துக்கங்களும் அழிக்கப் படுகின்றன. மேலும் இந்த விரதத்தின் பிரபாவத்தினால் மனிதர்கள் மோகம் என்னும் மாயையிலிருந்து விடுதலை பெறுவர். துக்கம் மற்றும் வாழ்வில் மிகவும் துயரத்தில் அவதிப்படுபவர்கள் நிச்சயம் இந்த விரதத்தினை அனுஷ்டிக்க வேண்டும். அதன் மகாத்மிய கதையை கவனமாகக் கேள் !!

முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதிக்கரையில் பத்ராவதி என்னும் வளமான நகரை த்யுதிமான் என்னும் அரசன் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான். அங்கே தனபாலன் என்கிற வியாபாரி ஒருவன் பரம விஷ்ணுபக்தனாக, பக்தர்களுக்கு சேவை சாதித்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு சுமனா, சத்புத்தி, மேதாவி, சுக்ரீதி, திருஷ்டபுத்தி என 5 புதல்வர்கள் இருந்தனர்.

அவற்றுள் திருஷ்டபுத்தி பாவியாகவும், துஷ்டனாகவும் விளங்கினான்.தெய்வம், பித்ருக்கள் என்று எவரையும் நம்பாமல், மதிக்காமல் தந்தை ஈட்டும் செல்வத்தினை மது, மாது, சூது என பல தீய வழிகளில் செலவிட்டு வந்தான்.
ஒருமுறை அவன் சாலையில் அனைவரும் அறியும் வகையில் ஒரு விலைமாதுவுடன் தோளில் சாய்ந்து கட்டிக்கொண்டு போவதைக் கண்ட தனபாலன், மற்றும் அவனது சகோதரர்கள், உறவினர்கள் அனைவரும் அவனை வெறுத்து ஒதுக்கத் துவங்கினர். தனபாலன் அவனை வீட்டை விட்டே துரத்தியடித்தான்.

வீட்டை விட்டு வெளியேறிய திருஷ்டபுத்தி, அவனிடம் இருந்த விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை விற்று வாழ்ந்து வந்தான். அவனது பணம் தீர்ந்தவுடன் அவனுடன் இருந்த துஷ்ட நண்பர்களும், வேசிகளும் அவனை விட்டு விலகினர்.

பசியில் வாடிய அவன், வேறு வழியின்றி, திருடுவது என்று முடிவுக்கு வந்தவனாக இரவு நேரங்களில் திருடி பிழைப்பு நடத்தி வந்தான். ஒருமுறை நகர காவலர்கள் அவனை பிடித்து விட்டனர். ஆனால் அவன் தந்தையின் நன்னடத்தை கருதி மன்னித்து விட்டு விட்டனர். ஆனால் இரண்டாவது முறை பிடிபட்ட போது அவனை அரசன் முன்னிலையில் நிறுத்தி அவனை நகரை விட்டே ஒதுக்கி வைத்து விட்டனர்.

மிகுந்த மனவருத்தம் அடைந்து, காட்டிலுள்ள விலங்குகளைக் கொன்று தின்று வாழ்ந்து வந்தான். ஒருநாள் எந்த விலங்குகளும் கிடைக்காமல் போகவே, பசியும், தாகமும் உடலை வருத்த அங்குமிங்கும் அலைந்து, திரிந்து இறுதியாக கௌண்டின்ய முனிவரின் ஆஸ்ரமத்தினை அடைந்தான்.

அப்போது தான் அவர் கங்கை நதியில் குளித்து முடித்து விட்டு வந்து கொண்டிருந்தார். அவரது ஈர உடையிலிருந்த நீர் துளிகள் அவன் மீது பட்ட மாத்திரத்தில் பாவியான அவனுக்கு நற்சிந்தனைகள் உருவாகியது. அவன் முனிவரின் அருகில் சென்று அவரை வணங்கி, மன்னிக்க முடியாத அளவிற்கு பாவம் செய்த எனக்கு அதிலிருந்து முக்தி பெற ஏதேனும் எளிய வழி இருந்தால் தயை கூர்ந்து கூறுங்கள் என்றான்.

அதைக் கேட்ட முனிவர், நான் கூறுவதை கவனமாகக் கேள் !! உனது நல்ல நேரம், இன்னும் சிறிது காலத்தில் மோகினி ஏகாதசி நன்னாள் வரவிருக்கிறது. அதனை கடைபிடிப்பதன் மூலம் உனது பாவ வினைகள் அனைத்தும் நீங்கி புதிய வாழ்வினைப் பெறுவாய் என்று அதனை கடைபிடிக்கும் வழிமுறைகளையும் அவனுக்கு கூறியருளினார்.

அதனை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த திருஷ்டபுத்தி, அவர் கூறியது போலவே, மோகினி ஏகாதசி விரதத்தினை விதிப்பூர்வமாக கடைபிடித்து நல்வாழ்வை பெற்றான். மேலும், இந்த விரதத்தின் பிரபாவத்தால் இறுதியில் கருடவாகனத்தில் விஷ்ணுலோகத்தை அடையும் பேறு பெற்றான் என மகரிஷி வசிஷ்டர் பிரபு ஸ்ரீராமரிடம் கூறி முடித்தார் என பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறினார்.

இவ்விரதத்தினால் மனிதர்கள் மோகம் என்னும் மாயத்திரை நீங்கி, முக்தியைப் பெறுவதோடு, அவர் வாழ்வில் துரதிர்ஷ்டங்கள், துயரங்கள், தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுவர்.

மேலும், எவரொருவர் இந்த நன்னாளில் இந்த விரதத்தின் மகாத்மியத்தை உணர்த்தும் இந்தக் கதையை படிக்கிறாரோ / சொல்கிறாரோ / கேட்கிறாரோ அவர்கள் ஓராயிரம் கோ தானம் செய்த புண்ணியத்தினை அடைவர் என்று பகவான் யுதிஷ்டிரரிடம் கூறி முடித்தார்.

***ஓம் நமோ பகவதே வாசுதேவாய***

Tuesday, April 28, 2015

Brain Death - update

I have written about brain death in various posts

மூளை இறக்குமா? அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா?

BRAIN DEATH - BULL SHIT!!!

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள்...!

Now here comes the proof to vindicate our stand... 




For those of you who can not read tamil - a 30 year old lorry owner met with an accident - he was treated in a private hospital and the doctors - after giving intensive treatment (read it as HEAVY BILLING) - declared Bharath as brain dead.  

The "dead" Bharath was taken to Guntur Government Hospital - the doctors there also gave intensive treatment - and finally declared him as brain dead.

At this point - Bharath's relatives came forwardto donate his organs.  (actually - the doctors will do counselling and show them the path to donation - bcos donation of organs is highly profitable) 

The medically declared "dead" Bharath was taken to a private hospital for harvesting the organs. The doctors there - while scanning the body - found movement in his body - and realized that the poor guy was alive!!!

If a doctor announces "brain death" - law should disbar him from practising medicine. If a doctor harvests organs from some one who is alive - but declared "brain dead" - law should come down heavily on that doctor - and declare him as a murderer.

IF BRAIN IS REALLY DEAD - HOW ARE THE OTHER ORGANS WORKING? 

IF BRAIN IS REALLY DEAD - THEN IT IS USELESS - THEREFORE IT CAN BE REMOVED.  WHY DO OTHER ORGANS STOP WORKING WHEN YOU REMOVE THIS USELESS "DEAD" BRAIN? THEREFORE DEATH HAPPENS NOT BECAUSE THE BRAIN DIED - BUT ONLY BECAUSE YOU CUT OFF THE ORGANS. THEREFORE - IT IS THE DOCTOR WHO KILLS!!!

7 DAYS - LOSE 7 KILOS

நாள் 1
ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு அந்நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் வாழைப்பழத்தை தவிர வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம்.

only fruits on first day. Avoid bananas. Drink lots of water.
நாள் 2
இரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். ஏன் உங்களுக்குப் பிடித்த உருளைக்கிழங்கைக் கூட பயமின்றி சாப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது, மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் குடித்து வாருங்கள்.

Only vegetables on 2nd day. Either boiled or raw as salad. Minimum of 8 glasses of water during the day.
நாள் 3
மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், மதியம் ஒரு பௌல் காய்கறி சாலட்டையும், இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளையோ சாப்பிடலாம். ஆனால் இந்நாளில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

Eat fruits and vegetables. One bowl of fruit in the morning - one bowl of vegetables in the afternoon - and either fruits or vegetables in the night. Avoid bananas and potatoes. As usual - lots of water.
நாள் 4
நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அது ஸ்மூத்தி, மில்க் ஷேக் என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அதிலும் குறிப்பாக ஸ்கிம் செய்யப்பட்ட பாலை தான் சாப்பிட வேண்டும்
நாள் 5
இந்நாளில் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 7-8 தக்காளியை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட வேண்டும். அதுவும் காலை முதல் மாலை வரை தக்காளியையும், இரவில் சாதத்தையும் சாப்பிடுவது நல்லது. ஆனால் இந்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவை இன்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, சாதாரணமாக 12 டம்ளர் தண்ணீர் குடித்தால், இந்நாளில் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Only tomatoes from morning to evening - either boiled or raw. One cup of rice in the night. Lots of water during the day.
நாள் 6
ஆறாம் நாளில் மதிய வேளையில் ஒரு கப் சாதத்தையும், மற்ற நேரங்களில் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

Vegetables for breakfast and dinner - one cup of rice in the afternoon.
நாள் 7
இந்த நாளில் ஒரு கப் சாத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் பழச்சாறுகளையும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும்

Seventh day - one cup of rice - lots of vegetables - lots of fruit juice.

If you follow this diet - not only your weight will reduce - but you will start feeling healthy too. Sugar patients - even though this diet wont harm you - if you are already suffering from weight loss - then please do not follow this diet regimen.

Lose weight healthily :-)

Sunday, April 26, 2015

30 நாட்கள் 30 சாதங்கள்

குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் முன்னர் - மதிய உணவு என்ன கொடுத்து அனுப்பலாம் என்று குழம்பினால் - கீழ் வரும் பதிவு உங்களுக்கு உதவலாம். இந்த தகவல் உரிமையாளர் சமையல் திலகம் ரேவதி சண்முகம் !!!

கோவைக்காய் சாதம்

தேவை:
உதிராக வடித்த சாதம் கப்
பெரிய வெங்காயம் 1, 
கோவைக் காய் 100 கிராம்,
 தேங்காய்த் துருவல்மிளகாய்த் தூள் தலா டீஸ்பூன்
எலுமிச்சை சாறு டீஸ்பூன்
கடுகுஉளுந்து தலா அரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு டீஸ்பூன்
எண்ணெய் டேபிள் ஸ்பூன்,
 உப்பு தேவைக்கு
கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை:
வெங்காயம்கோவைக்காயை மெல்லியதாக நறுக்குங்கள். 
வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகுஉளுந்துகடலைப் பருப்பு ஆகியவற்றை தாளித்துவெங்காயம்தேங்காயை வதக்குங்கள். பச்சை வாடை போனதும்கோவைக் காய்மிளகாய்த் தூள்உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கிகறிவேப்பிலைஎலுமிச்சம் சாறு சேர்த்து இறக்குங்கள்.
இந்தக் கலவையோடு சாதத்தைக் கலந்து பரிமாறுங்கள்.

கறிவேப்பிலை சாதம்

தேவை: 
உதிராக வடித்த சாதம் கப்கடுகுஉளுந்து தலா அரை டீஸ்பூன்கடலைப் பருப்பு டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்நெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
பொடிக்க: மிளகுகசகசா தலா டீஸ்பூன்சீரகம் டீஸ்பூன்முந்திரி 4, கறிவேப்பிலை கப்தேங்காய்த் துருவல் டேபிள் ஸ்பூன்மிளகாய் வற்றல் 6.

செய்முறை: 
கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள். பிறகு மிளகுசீரகம்கசகசாமிளகாய் வற்றல்முந்திரிதேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.
எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகுஉளுந்துகடலைப் பருப்பு ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில்பொடித்த பொடிஉப்புதாளிதக் கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்குங்கள்.

மும்பை சாதம்

தேவை: பச்சரிசி அரை கப்தோலுடன் உடைத்த பாசிப் பருப்பு கப்மஞ்சள் தூள் சிட்டிகைபச்சை மிளகாய் 2, நெய் டேபிள் ஸ்பூன்கடுகுசீரகம் தலா அரை டீஸ்பூன்பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகைகறிவேப்பிலை சிறிதளவுஉப்பு தேவைக்கு.
செய்முறை: குக்கரில் அரிசிபருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்மஞ்சள் தூள்உப்பு மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.
வாணலியில்மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகுசீரகம்கறிவேப்பிலைபெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.
இந்தக் கலவையைசாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்.

கதம்ப சாதம்

தேவை: பச்சரிசிதுவரம் பருப்பு தலா கப்காய்கறி கலவை (கேரட்பீன்ஸ்கோஸ்பீட்ரூட்…) 2 கப்சின்ன வெங்காயம் 10, தக்காளி 5, சாம்பார் தூள் டேபிள் ஸ்பூன்புளி கரைசல் அரை கப்பெருங்காயம்மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன்கடுகுஉளுந்து தலா டீஸ்பூன்எண்ணெய்நெய் தலா டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: காய்களை விரல் நீளத் துண்டுகளாகவும்வெங்காயம்தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். அரிசிபருப்புடன் ஆறு கப் தண்ணீர்காய்கறிகள்மஞ்சள் தூள்உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும்மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
வாணலியில் எண்ணெய்நெய்யை சூடாக்கி கடுகுஉளுந்து தாளித்துவெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளிசாம்பார்தூளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கிபுளி கரைசல்மஞ்சள் தூள்பெருங்காயத்தூள்உப்புஒரு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிபருப்பு சாதக் கலவையோடு சேர்த்துக் கலக்குங்கள்.

எள் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்கடுகு டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுநெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
பொடிக்க: எள் டேபிள் ஸ்பூன்உளுந்து டேபிள் ஸ்பூன்மிளகாய் வற்றல் 8, தேங்காய்த் துருவல் டேபிள் ஸ்பூன்எண்ணெய் டீஸ்பூன்பெருங்காயம் சிறு துண்டு.
செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் போட்டுபொரியும்படி வறுத்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து பிறகு மிளகாய்உளுந்துதேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்தெடுங்கள். எள் உட்படவறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடித்து வையுங்கள்.
நெய்யில் கடுகுகறிவேப்பிலையை தாளியுங்கள்.
சாதத்தில் எள் பொடிஉப்பு ஆகியவற்றைத் தூவிகடுகு தாளிதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.

மாங்காய் இஞ்சி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்தோல் நீக்கி துருவிய மாங்காய் இஞ்சி துருவல் அரை கப்மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் 4, எலுமிச்சை சாறுஎண்ணெய் தலா டேபிள் ஸ்பூன்கடுகுஉளுந்து தலா அரை டீஸ்பூன்,கறிவேப்பிலை சிறிதளவுஉப்பு தேவைக்கு.
பொடிக்க: உளுந்து டேபிள் ஸ்பூன்கடலைப் பருப்பு அரை டேபிள் ஸ்பூன்தனியா டீஸ்பூன்தேங்காய்த் துருவல் டேபிள் ஸ்பூன்மிளகாய் 3, எண்ணெய் டீஸ்பூன்.
செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில்மாங்காய்இஞ்சி துருவல்பச்சை மிளகாய்மஞ்சள் தூள்சிறிதளவு உப்பு ஆகியவற்றை வதக்கிகரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிவக்க வறுத்து பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகுஉளுந்துகறிவேப்பிலையை தாளியுங்கள்.
சாதத்தில்அரைத்த விழுதுபொடித்து வைத்துள்ள பொடிஉப்புதாளிதக் கலவைஎலுமிச்சம் சாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.

ஸ்பெஷல் எலுமிச்சம் சாதம்

தேவை: பச்சரிசி கப்பால் கப்எலுமிச்சம் பழச்சாறு டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் டீஸ்பூன்வேக வைத்த கொண்டைக் கடலை கால் கப்கடுகு டீஸ்பூன்உளுந்துகடலைப் பருப்பு தலா டீஸ்பூன்மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் 3, இஞ்சி துண்டுகறிவேப்பிலை சிறிதளவுஉப்பு தேவைக்கு.
செய்முறை: அரிசியுடன் பால்மூன்று கப் தண்ணீர்உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். பச்சை மிளகாய்இஞ்சிகறிவேப்பிலை இவற்றை ஒன்றிரண்டாக நசுக்குங்கள். எண்ணெயில் கடுகுஉளுந்துகடலைப் பருப்புமிளகாய் வற்றல்பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுங்கள். பிறகு பச்சை மிளகாய்இஞ்சிகறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிமஞ்சள்தூள்உப்புஎலுமிச்சம் பழச்சாறுகொண்டைக் கடலை ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்குங்கள்.
இந்தக் கலவையோடு சாதத்தை சேர்த்துக் கிளறுங்கள்.

புதினா கத்தரிக்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்பச்சை கத்தரிக்காய் 8, பெரிய வெங்காயம் 1, தக்காளி 2, புளி கரைசல் டேபிள் ஸ்பூன்கடுகுசீரகம்மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன்நெய் டேபிள் ஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
அரைக்க: தேங்காய்த் துருவல் டேபிள் ஸ்பூன்புதினாமல்லி தலா அரை கட்டுபச்சை மிளகாய் 4, பூண்டு பல்.
செய்முறை: அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரையுங்கள். வெங்காயம்தக்காளிகத்தரிக்காய் இவற்றை நீளவாக்கில்மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெய்நெய்யைக் காயவைத்து கடுகுசீரகத்தை தாளித்து வெங்காயம்கத்தரிக்காயைச் சேர்த்துஉப்புமஞ்சள் தூள் தூவி ஐந்து நிமிடம் வதக்குங்கள். பிறகுஅரைத்த விழுதுதக்காளிஉப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி,புளி கரைசலைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
இந்தக் கலவையை சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.

தேங்காய்ப்பால் தக்காளி சாதம்

தேவை: பச்சை பட்டாணி அரை கப்பச்சரிசி கப்தேங்காய்ப் பால் கப்தக்காளி 6, பச்சை மிளகாய் 2, மிளகாய்த்தூள் டீஸ்பூன்மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்உப்பு தேவைக்குகடுகுசீரகம் தலா அரை டீஸ்பூன்நெய் டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரிசியை சுத்தம் செய்து அதனுடன்தேங்காய்ப் பால்மூன்று கப் தண்ணீர்உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். தக்காளிபச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காய வைத்து கடுகுசீரகம் தாளித்து பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு தக்காளிமஞ்சள் தூள்மிளகாய்த்தூள்உப்புபட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.
சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.
புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

பிஸிபேளா பாத்

தேவை: அரிசிதுவரம் பருப்பு தலா கப்மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்நெய் டேபிள் ஸ்பூன்கடுகுஉளுந்து தலா டீஸ்பூன்சின்ன வெங்காயம் கப்தக்காளி 4, பச்சை பட்டாணி அரை கப்வேகவைத்து வழித்தெடுக்கப்பட்ட முருங்கைக்காய் விழுது அரை கப்புளி எலுமிச்சை அளவுகறிவேப்பிலை சிறிதளவுஉப்பு தேவைக்கு.
அரைக்க: தனியா டேபிள் ஸ்பூன்மிளகாய் வற்றல் 8, கடலைப் பருப்பு டேபிள் ஸ்பூன்வெந்தயம் அரை டீஸ்பூன்பட்டைலவங்கம்ஏலக்காய் தலா 1, கசகசா டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரிசிபருப்புடன் மஞ்சள் தூள்பெருங்காயத் தூள்உப்பு மற்றும் ஆறு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும்மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகுஉளுந்தை தாளித்துவெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளிபட்டாணி சேர்த்து வதக்குங்கள். பிறகு புளி கரைசலைச் சேர்த்துபச்சை வாடை போகக் கொதித்ததும் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துமேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து முருங்கை விழுதை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
இதனை வெந்த அரிசி பருப்பு கலவையுடன் கலக்குங்கள்.

கல்கண்டு சாதம்

தேவை: பச்சரிசி கப்பால் லிட்டர்கல்கண்டு கப்ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன்கிராம்பு 1, மில்க்மெய்ட் டேபிள் ஸ்பூன்நெய் கால் கப்முந்திரி 10, பாதாம் 8, வெள்ளரி விதை டேபிள் ஸ்பூன்சார பருப்பு அரை டேபிள் ஸ்பூன்கிராம்பு 1, ஜாதிபத்ரி சிறிதளவு.
செய்முறை: அரிசியை ஒரு கப் தண்ணீர்ஒரு லிட்டர் பால் சேர்த்து மிதமான தீயில் வேக வையுங்கள். அடிப் பிடிக்காமல் இருக்கஅவ்வப்போது கிளறிவிடுங்கள். அரிசி வெந்து குழைந்ததும் அதில் கல்கண்டை பொடித்துச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கிளறுங்கள்.
பாதாமை மெல்லிதாக சீவுங்கள். ஏலம்கிராம்புஜாதிபத்ரி ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடித்து வையுங்கள். நெய்யைக் காயவைத்து முந்திரியை வறுத்துவெள்ளரி விதைசார பருப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
கல்கண்டு சாதத்தில் பாதாம்ஏலம்கிராம்புஜாதிபத்ரி பொடிமுந்திரிவெள்ளரிவிதை கலவையைச் சேர்த்துக் கிளறுங்கள்.

சீரக சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப் (பாசுமதி அரிசியாக இருந்தால் கூடுதல் சுவை தரும்)முந்திரி 10, சீரகம் டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுநெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: நெய்யை சூடாக்கி சீரகத்தைத் தாளியுங்கள். பிறகு முந்திரியைச் சேர்த்து இளம் சிவப்பாக வறுத்துகறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து இறக்குங்கள்.
சாதத்தில்சீரகக் கலவைதேவையான உப்பு சேர்த்துக் கலக்கினால் சீரக சாதம் ரெடி.

ஆந்திரா புளியோதரை

தேவை: உதிராக வடித்த சாதம் கப்புளி சிறிய எலுமிச்சை அளவுபச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிதுமஞ்சள் தூள் அரை டீஸ்பூன்உப்பு தேவைக்குவெல்லத் துருவல் டீஸ்பூன்நல்லெண்ணெய் டேபிள் ஸ்பூன்கடுகு ஒன்றரை டீஸ்பூன்உளுந்துகடலைப் பருப்பு தலா டீஸ்பூன்மிளகாய் வற்றல் 4, பெருங்காயம் அரை டீஸ்பூன்.
செய்முறை: சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற்போல வைத்து நடுவில் குழிவாக்குங்கள். அதில் பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறி)கறிவேப்பிலைமஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் டீஸ்பூன் கடுகுஉளுந்துகடலைப் பருப்புமிளகாய் வற்றல்பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்துபுளி கரைசலை ஊற்றிஉப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள். பிறகு வெல்லம் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
மீதமுள்ள கடுகை அரைத்து வையுங்கள்.
சாதத்தில் புளி கலவைஅரைத்து வைத்துள்ள கடுகு விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

மாங்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்புளிப்பான மாங்காய் துருவல் கப்பச்சை மிளகாய் 6, பெருங்காயம் டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்கடுகுஉளுந்துதலா அரை டீஸ்பூன்மிளகாய் வற்றல் 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் மாங்காய்த் துருவல் மற்றும் மிளகாயை வதக்கி எடுத்து கரகரப்பாக அரையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில்கடுகுஉளுந்துமிளகாய் வற்றல்பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்துமஞ்சள் தூள் சேர்த்து இறக்குங்கள். இதனை மாங்காய் கலவையோடு சேர்த்து மேலும் ஒரு சுற்று அரைத்தெடுங்கள்.
சாதத்தில்அரைத்த விழுதுதேவையான உப்பு சேர்த்துக் கலக்குங்கள்.

தோசைக்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்தோசைக் காய் 1, பச்சை மிளகாய் 6, புளி சிறிய எலுமிச்சை அளவுமஞ்சள் தூள் கால் டீஸ்பூன்கடுகு அரை டீஸ்பூன்மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுஎண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: தோசைக்காயின் தோல்விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் தோசைக் காயை வதக்குங்கள். பிறகு பச்சை மிளகாய்புளிமஞ்சள் தூள்உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகுமிளகாய்பெருங்காயம்கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில்அரைத்த விழுதுஉப்புகடுகு தாளிதக் கலவை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.

பூண்டு சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்சின்ன வெங்காயம் அரை கப்பூண்டு கப்இஞ்சி துண்டுகறிவேப்பிலை சிறிதளவுவறுத்துப் பொடித்த மிளகுத் தூள் டீஸ்பூன்சீரகத் தூள் டீஸ்பூன்மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்கடுகுசீரகம் தலா அரை டீஸ்பூன்நெய் டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் 4, உப்பு தேவைக்கு.
செய்முறை: வெங்காயம்பூண்டுஇஞ்சி இவற்றின் தோலை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்குங்கள். நெய்யில் கடுகுசீரகம்மிளகாய்கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து வெங்காயம்இஞ்சிபூண்டு ஆகியவற்றை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கிமிளகுத்தூள்சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
இந்த பூண்டுக் கலவையில் சாதத்தைச் சேர்த்துதேவையான உப்பு தூவிக் கிளறுங்கள்.

மாங்காய் மசாலா சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்புளிப்பான மாங்காய் 1, மிளகாய்த் தூள் டீஸ்பூன்கடுகுத் தூள் டீஸ்பூன்நல்லெண்ணெய் டேபிள் ஸ்பூன்கடுகு டீஸ்பூன்நெய் டீஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: மாங்காயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயுடன் மாங்காய்பொடி வகைகள்உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
நெய்யில் கடு-கை பொரித்தெடுங்கள்.
சூடான சாதத்தில் தாளிதக் கலவை மற்றும் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.

சோயா சாதம்

தேவை: பச்சரிசி கப்சோயா உருண்டைகள் அரை கப்பெரிய வெங்காயம் 2, இஞ்சி,பூண்டு விழுது டீஸ்பூன்மிளகாய்த் தூள் டீஸ்பூன்தயிர் அரை கப்கரம் மசாலாத் தூள் டீஸ்பூன்சீரகம் அரை டீஸ்பூன்எண்ணெய்நெய் தலா டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டுமூன்று முறை நன்றாகக் கழுவுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில்சன்னமாக நறுக்குங்கள்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கிசீரகத்தை தாளித்துவெங்காயத்தை வதக்குங்கள். பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு உப்புதயிர்மிளகாய்த் தூள்கரம் மசாலாசோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். பிறகு அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கிஇரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

அரு நெல்லிக்காய் சாதம்

தேவை: பச்சரிசி கப்அரு நெல்லிக்காய் அரை கப் (அரு நெல்லி என்பது சிறு நெல்லி)பச்சை மிளகாய் 10, தேங்காய்த் துருவல் டீஸ்பூன்பெருங்காயம் டீஸ்பூன்கடுகுஉளுந்துமஞ்சள்தூள் தலா அரை டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுஉப்பு தேவைக்கு.
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள். டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்குங்கள். பிறகுநெல்லிக்காய்மஞ்சள் தூள்சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி நைஸாக அரைத்தெடுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகுஉளுந்துபெருங்காயம்கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில்நெல்லிக்காய் விழுதுகடுகு தாளிதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

கொண்டைக்கடலை சாதம்

தேவை: பச்சரிசி கப்சிறிய கருப்பு கொண்டைக் கடலை அரை கப்தேங்காய்ப் பால் கப்பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது டேபிள் ஸ்பூன்மிளகாய்த் தூள் டீஸ்பூன்தனியாத் தூள்கரம் மசாலா தலா டீஸ்பூன்எண்ணெய்நெய் தலா டேபிள் ஸ்பூன்பிரிஞ்சி இலை 2, உப்பு தேவைக்கு.
செய்முறை: கடலையை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் வேகவைத்து எடுத்து வையுங்கள்.
வெங்காயம்தக்காளியை மெல்லியதாக நறுக்குங்கள்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை காயவைத்துபிரிஞ்சி இலையை தாளியுங்கள். பிறகு வெங்காயம்தக்காளியை வதக்கிஇஞ்சி பூண்டு விழுதுமிளகாய்த் தூள்தனியாத் தூள்கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு தேங்காய்ப் பால்இரண்டு கப் தண்ணீர்தேவையான உப்புவேக வைத்த கடலைஅரிசி ஆகியவற்றைச் சேர்த்து மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கிமேலும் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து இறக்குங்கள்.

ஸ்பெஷல் தக்காளி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்பெரிய வெங்காயம் 2, தக்காளி 6, பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகைகறிவேப்பிலைமல்லித்தழை தலா சிறிதளவுகடுகுஉளுந்து தலா அரை டீஸ்பூன்நெய் டேபிள் ஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
பொடிக்க (முதல் வகை): பட்டைலவங்கம்ஏலக்காய் தலா 2, கசகசா டீஸ்பூன்முந்திரி 6, எண்ணெய் டீஸ்பூன்.
மற்றொரு வகை பொடிக்கு: தனியாதுவரம் பருப்பு தலா டீஸ்பூன்மிளகாய் வற்றல் 4, கொப்பரை தேங்காய்த் துருவல் டேபிள் ஸ்பூன்எண்ணெய் டீஸ்பூன்.
செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை (இரண்டு வகையையும் தனித்தனியாக) வறுத்து பொடித்து வையுங்கள். வெங்காயம்தக்காளியை பொடியாக நறுக்குங்கள். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.
வாணலியில் எண்ணெய்நெய்யைக் காய வைத்து கடுகுஉளுந்தை தாளியுங்கள். பிறகு வெங்காயம்மிளகாய்தக்காளி ஆகியவற்றை உப்புமஞ்சள் தூள் சேர்த்து வதக்கி இறக்குங்கள். சாதத்தில்பொடி வகையை தூவிதக்காளி கலவை மற்றும் கறிவேப்பிலைமல்லித்தழை சேர்த்துக் கிளறுங்கள்.

காய்கறி சாதம்

தேவை: பச்சரிசி கப்காய்கறி கலவை (கேரட் பீன்ஸ்பட்டாணி) கப்பட்டைலவங்கம்ஏலக்காய் தலா 2, பெரிய வெங்காயம் 3, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது டேபிள் ஸ்பூன்தயிர் அரை கப்புதினாமல்லி தலா அரை கட்டுபச்சை மிளகாய் 3, மிளகாய் தூள் டீஸ்பூன்உப்பு தேவைக்குநெய் டேபிள் ஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்.
செய்முறை: குக்கரில் எண்ணெய்நெய்யைச் சூடாக்கி பட்டைலவங்கம்ஏலக்காய்வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள். பின்னர் காய்களைச் சேர்த்து வதக்கிஇஞ்சி பூண்டு விழுதுதயிர்மிளகாய்மிளகாய் தூள்உப்புமஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி ஆறு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அரிசியைச் சேர்த்து கிளறி மூடி வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

உளுந்து பொடி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்எலுமிச்சை சாறு டேபிள் ஸ்பூன்கடுகு டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுநெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
பொடிக்க: முழு உளுந்து டேபிள் ஸ்பூன்துவரம் பருப்பு டேபிள் ஸ்பூன்கொப்பரைத் தேங்காய்த் துருவல் டேபிள் ஸ்பூன்மிளகாய் வற்றல் 8, பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன்எண்ணெய் டீஸ்பூன்.
செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றைமிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். நெய்யில் கடுகுகறிவேப்பிலையை தாளித்துப் பொடியோடு சேர்த்துக் கலக்குங்கள்.
சாதத்தில்பொடித்து வைத்துள்ள பொடிஉப்புஎலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறுங்கள்.

வெந்தயக்கீரை சாதம்

தேவை: பச்சரிசி கப்வெந்தயக்கீரை கட்டுதக்காளி 3, வெங்காயம் 2, இஞ்சி துண்டுபூண்டு 10 பல்பச்சை மிளகாய் 4, மிளகாய்த் தூள்மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன்சீரகத்தூள்தனியாத்தூள்கரம் மசாலா தலா டீஸ்பூன்தேங்காய்ப் பால் ஒரு கப்எண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: கீரையைச் சுத்தம் செய்யுங்கள். வெங்காயம்தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். இஞ்சிபூண்டுமிளகாய் ஆகியவற்றை நசுக்குங்கள். எண்ணெயில் பூண்டுஇஞ்சிபச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு வெங்காயம்கீரைதக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மீதமுள்ள மசாலாத்தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும்இந்தக் கலவையோடு தேங்காய்ப் பால்நான்கு கப் தண்ணீர்தேவையான உப்புஅரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கிஇரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

ஸ்பெஷல் தயிர் சாதம்

தேவை: பச்சரிசி கப்பால் அரை கப்புளிக்காத புதிய தயிர் இரண்டரை கப்இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது டீஸ்பூன்வெண்ணெய் டேபிள் ஸ்பூன்பெருங்காயம் அரை டீஸ்பூன்கறிவேப்பிலைமல்லித் தழை சிறிதுகடுகு டீஸ்பூன்மிளகாய் வற்றல் 3, பொடியாக நறுக்கிய முந்திரி டேபிள் ஸ்பூன்திராட்சை 15, எண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: சாதத்தை குழைவாக வேக வையுங்கள். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்புவெண்ணெய்பெருங்காயம்இஞ்சிபச்சை மிளகாய் விழுதுபால் மற்றும் கறிவேப்பிலைமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
எண்ணெயில் கடுகுமிளகாய்முந்திரிதிராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில் தாளிதக் கலவைதயிரைக் கலக்குங்கள்.

கத்தரி மொச்சை சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்கத்தரிக்காய் 6, காய்ந்த மொச்சை கால் கப்பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்உப்பு தேவைக்குபிரிஞ்சி இலை 2, எண்ணெய் டேபிள் ஸ்பூன்.
அரைக்க: தேங்காய் டேபிள் ஸ்பூன்மிளகாய்த் தூள் டீஸ்பூன்தனியாத் தூள் அரை டீஸ்பூன்இஞ்சி துண்டுபூண்டு பல்சோம்பு அரை டீஸ்பூன்.
செய்முறை: மொச்சைக் கொட்டையை முதல் நாளிரவே ஊற வைத்துமறுநாள் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வையுங்கள். கத்தரிக்காய்வெங்காயம்தக்காளி ஆகியவற்றை மெல்லியதாக நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.
எண்ணெயில்பிரிஞ்சி இலையைத் தாளித்து வெங்காயம்கத்தரிக்காயை மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள். காய் முக்கால் பதம் வெந்ததும்தக்காளிஅரைத்த விழுதுமொச்சைக் கொட்டைதேவையான உப்பு சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.
சாதத்துடன் இந்த விழுதைச் சேர்த்துக் கலக்குங்கள்.

கொத்துமல்லி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்கடுகுஉளுந்து தலா அரை டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுநெய் டீஸ்பூன்உப்பு தேவைக்கு.
அரைக்க: மல்லித் தழை கட்டுமிளகாய் வற்றல் 10, உளுந்து டேபிள் ஸ்பூன்பெருங்காயம் சிறு துண்டுபுளி சிறு எலுமிச்சை அளவுஎண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: மல்லித் தழையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயில் பெருங்காயம்மிளகாய் வற்றலை வறுத்தெடுங்கள். பிறகு உளுந்தை வறுத்து எடுத்து தனியே வையுங்கள். பிறகு மல்லித் தழையை வதக்குங்கள்.
இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துஅதனுடன் உப்புபுளி சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.
நெய்யில் கடுகுஉளுந்துகறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளியுங்கள்.
சாதத்தில்அரைத்த விழுதுதாளிதக் கலவைஉப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கிளறுங்கள்.

காய்கறி எலுமிச்சம் சாதம்

தேவை: பச்சரிசி கப்எலுமிச்சம் பழம் 2, கேரட் 1, பீன்ஸ் 10, காலிஃப்ளவர் துண்டுபட்டாணி அரை கப்இஞ்சி துண்டுபச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் டீஸ்பூன்பெருங்காயத் தூள் டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுகடுகு அரை டீஸ்பூன்உளுந்து டீஸ்பூன்கடலைப் பருப்பு டீஸ்பூன்முந்திரி 10, எண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள். காய்கள்இஞ்சிபச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.
எண்ணெயில் கடுகுஉளுந்துகடலைப் பருப்புமுந்திரி ஆகியவற்றைத் தாளித்து காய்கறிகள்இஞ்சிமிளகாய்பெருங்காயத் தூள்கறிவேப்பிலைசிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் வெந்ததும்எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.
இந்தக் கலவையை சாதத்தில் கொட்டிஉப்பு சேர்த்துக் கிளறுங்கள்.

கூட்டாஞ்சோறு

தேவை: புழுங்கல் அரிசி கப்துவரம் பருப்பு அரை கப்கேரட்கத்தரிக்காய்முருங்கைக்காய்உருளைக்கிழங்கு ஆகியவை தலா 1, வாழைக்காய் பாதியளவுமுருங்கைகீரைஅரைக் கீரைமுளைக் கீரை தலா கைப்பிடிசின்ன வெங்காயம்மிளகாய் வற்றல் தலா 8, பூண்டு பல்கடுகுஉளுந்துசீரகம் தலா டீஸ்பூன்மஞ்சள் தூள் சிறிதளவுதேங்காய்த் துருவல் டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்புளி சிறிய எலுமிச்சை அளவுவடகம் துண்டுஉப்பு தேவைக்கு.
செய்முறை: காய்களை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம்பூண்டுதேங்காய்த் துருவல்மிளகாய்சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். புளியை சிறிதளவு நீரில் கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.
அரிசிபருப்புடன் காய்கள்கீரை வகைகள்மஞ்சள் தூள்உப்புஅரைத்த விழுதுபுளி கரைசல்நான்கு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் போட்டு மூடி வையுங்கள். விசில் வந்ததும்மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
எண்ணெயில் கடுகுஉளுந்தை தாளித்துவடகத்தைப் பொரித்தெடுங்கள்.
இந்த வடகக் கலவையைச் சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.

காளான் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்காளான் 10, பெரிய வெங்காயம் 1, இஞ்சி துண்டுபூண்டு பல்வெங்காயத் தாள் 2, பச்சை கலர் சில்லி சாஸ் டேபிள் ஸ்பூன்மிளகுத்தூள் டீஸ்பூன்சீன உப்பு அரை டீஸ்பூன்சோயா சாஸ் டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: வெங்காயம்இஞ்சிபூண்டுகாளான் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாகவும்வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்குங்கள்.
எண்ணெயில் வெங்காயம்இஞ்சிபூண்டு ஆகியவற்றை வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறியதும் காளானைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்கிபிறகு சில்லி சாஸ்சோயா சாஸ்மிளகுத்தூள்சீன உப்புஉப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறுங்கள்.
இந்தக் கலவையில் சாதம்வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.