Wednesday, January 4, 2017

வர்ம அறிவியல் - 3

வர்ம அறிவியலின் அடிப்படை 12 இணை நரம்புகள். அவற்றை முதல் பதிவில் சுட்டி காட்டினோம்.

இன்று முதல் உடலின் அடிப்படையை பற்றி தெரிந்து கொள்வோம்.

மனித உடல் 96 தத்துவங்களின் கலவை. அவையாவன :

1. பரு உடல் தத்துவங்கள் - 25
2. நுண்ணுடல்  தத்துவங்கள் - 35
3. காரண உடல் தத்துவங்கள் - 36

பரு உடல் - தாய் கொடுப்பது - ஏழு தாதுக்களையும் அடிப்படையாக கொண்டு பிண்ட தத்துவ முறையில் விளங்குவது.

நுண்ணுடல் - உயிர் - தந்தை கொடுப்பது - 12 வாயுக்களையும் (10 அல்ல 12 - விளக்கம் வேறு பதிவில்) 12 நாடிகளையும் அடிப்படையாக கொண்டு சராசரி தத்துவ முறையில் விளங்குவது.

காரணவுடல் - ஆன்மா - இறைவன் கொடுப்பது - ஐம்பொருட்களை (ஐம்பூதங்களை) அடிப்படையாக கொண்டு அண்ட தத்துவ நிலையில் விளங்குவது.

அதாவது

பருவுடல் = உடல்
நுண்ணுடல் = உயிர்
காரணவுடல் = ஆன்மா.

தாயிடம் இருந்து வரும் உடல் - சாத்வீகம்
தந்தையிடம் இருந்து வரும் உயிர் - இராசசம் (வீரம்)
இறைவனிடம் இருந்து வரும் ஆன்மா - தாமசம் என்று குணங்களை பிரித்து பார்க்கலாம்.

தூல உடல் தத்துவங்கள் 25

குடம் போல சடம் எடுத்த தூல தத்துவம்
     கூறுகிறேன் பூதமஞ்சு பொறியுமஞ்சாம்
சடத்திலே புலனஞ்சு கன்மேந்திரியம் அஞ்சு
     சாற்றுகிறேன் அஞ்சுடனே ஞானேந்திரியமஞ்சு
மடத்திலே இவை தூல தத்துவம் இருபத்தைந்தாம்
     மைந்தனே சொல்லிவிட்டேன் சூட்சமாக....

5 - பூதம்
5 - பொறி
5 - புலன்
5 - கன்மேந்திரியம்
5 - ஞானேந்திரியம்

மொத்தம் 25.

பூதங்களில்
நிலம்         = எலும்பு,மாமிசம்,தோல்,நரம்பு,உரோமம்
நீர்             = உமிழ்நீர்,சிறுநீர்,வியர்வை,இரத்தம்,விந்து
காற்று      = சுவாசம், வாயு
ஆகாயம் = மூளை
நெருப்பு   = பசி,தூக்கம்,தாகம்,உடலுறவு,அழுகை

நுண்ணுடல் தத்துவங்கள் 35

கண்ணான கரணம் நால் அறிவு ஒன்று
கதிப்பான நாடி பத்து வாயு பத்து
எண்ணான சயமஞ்சு கோசமஞ்சு
உத்தமனே சூட்சும தத்துவம் முப்பத்தைந்தாம்
விள்ளான இதற்குள்ளே சூத்திரமுண்டு
வினவிடிலோ தொல்லையப்பா அறிவோர்க்காகும்
மண்ணான மண்ணகற்றி விண்ணறிந்தோன்
மாசில்லா அதன் பெருமை அறிவுள்ளோர்க்கு

4   - கரணம்
1   - அறிவு
10 - நாடி
10 - வாயு
5   - சயம்
5   - கோசம்

மொத்தம் 35

வாயு 10 அல்ல 12 எனபதும் நாடி 10 அல்ல 12 என்பதுமே இதில் உள்ள சூத்திரம்.

காரணவுடல் தத்துவங்கள் 36

அறிவான கரணத்தின் தத்துவங்கள்
அறைகிறேன் முப்பத்து ஆறு கேளு
குறியான ஆதாரம் ஆறு மண்டலமே மூன்று
கூறுகிறேன் மலம் மூன்று தோசம் மூன்று
பிரிவான ஏடணை மூன்று குணமும் மூன்று
பிசகாத ராகம் எட்டு வினையும் ரண்டு
தெரிவான அவஸ்தை அஞ்சும் கூட்டிப்பாரு
தெளிவாக தொண்ணூற்றியாறு பிரிவுமாச்சே.

6 - ஆதாரம்
3 - மண்டலம்
3 - மலம்
3 - தோசம்
3 - ஏடணை
3 - குணம்
8 - ராகம்
2 - வினை
5 - அவஸ்தை

மொத்தம் 36.

பரு உடல் தத்துவங்கள் - 25
நுண்ணுடல்  தத்துவங்கள் - 35
காரண உடல் தத்துவங்கள் - 36

மொத்தம் 96.


No comments:

Post a Comment