உணவே மருந்து என்பது நம் முன்னோர்களால் நமக்கு தெரிவிக்கப்பட்ட உண்மை - அளிக்கப்பட்ட பொக்கிஷம். ஆனால் இன்று அவசர உணவுக்கு அடிமையாகும் நாம் அவசர உறவுகளையும் அவசர மரணத்தையும் தழுவும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இதில் கொடுமை என்னவென்றால் - வளமான நமது பாரம்பரியம் இன்று பலருக்கு தெரியாமலே இருப்பதுதான். தெரிந்தால்தானே பாதுகாக்கமுடியும்... தெரிந்தால்தானே பின் பற்ற முடியும்...
இந்த பூமியை சுற்றிதான் எல்லா கோள்களும் வலம் வருகின்றன என்ற கொள்கையை 1543-இல் மாற்றி அமைத்தவர் COPERNICUS என்று புவியியல் பாடத்தில் சொல்லி கொடுக்கிறார்கள்... ஆனால் உலவுதால் இதற்கு "உலகம்" என்று பெயரிட்ட தமிழரின் அறிவியல் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்த கருத்தை சொல்லவில்லையா? "தொங்குவது" என்ற பொருள் கொண்ட "ஞாலுதல்" என்ற வார்த்தையை கொண்டு சூரியனுக்கு "ஞாயிறு" என்றும் இந்த உலகத்துக்கு "ஞாலம்" என்றும் பெயரிட்டது அறிவியல் இல்லையா? தொன்று தொட்டே சூரியனை நடுவில் வைத்து அதை சுற்றி சரியாக ஒன்பது கோள்களை அமைத்து கோவில்களில் வழிபடும் நமது பாரம்பரியம் இதை சொல்லவில்லையா??? பழமையான நவக்கிரக கோவிலான கும்பகோணம் திருக்கோவில், COPERNICUS இந்த கருத்தை சொல்வதற்கு முன் கி.பி. 1146-1163-இலேயே கட்டி முடிக்க பட்டு விட்டது!!!! ஏறக்குறைய 400 ஆண்டுகள் கழித்து நாம் கல்லால் கட்டி வைத்த அதே கருத்தை ஒருவன் புதிதாக சொல்கிறான் என்று சொன்னால் நாம் கேலி செய்ய வேண்டாமா? நமது முன்னோரின் அறிவியல் அறிவை எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டாமா?
ஏலாதி, திரிகடுகம் என்று பல வகை மருந்துகள் வலம் வர தொடங்கியபோதே
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்"
(ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.)
என்று மருந்துகளை எதிர்த்து முழக்கம் இட்ட வள்ளுவ பெருந்தகையானின் வழி வந்தவர்கள் நாம்...
மருந்து என்று தலைப்பு தந்து 10 பாடல்களை இயற்றிய வள்ளுவர் அதில் 6 பாடல்களை உணவு குறித்தே பாடி உள்ளார் என்பதில் இருந்தே உணவு எவ்வளவு பெரிய விஷயம் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே ஒன்றை பார்த்து விட்டோம்.. ,மேலும் ஐந்து பாடல்களை கீழே தருகிறேன்...
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
மருத்துவம் படிக்கலாம் என்று வந்தால் உணவை பற்றி பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம்... நமது உடலுக்கு வரும் சக்திகளில் பெரும்பாலான சக்தி உணவில் இருந்தே வருகிறது. எனவே உணவை முதன்மை படுத்துகிறேன். உங்களிடம் சிகிச்சைக்கு வரும் நபரின் உணவு பழக்கங்கள் உங்களின் சிகிச்சையை நிச்சயம் பாதிக்கும். நீங்கள் அவரின் உடலில் உஷ்ண சக்தியை அதிகரிக்க முயலும்போது அவர் உணவு குளிர்ச்சியை விளைவிப்பதாக இருந்தால் உங்கள் சிகிச்சை பலன் தராது. இதனால் நோயாளிக்கு பலன் இல்லை என்பது ஒரு குறையாக தெரிந்தாலும் அதை விட மிகப் பெரிய குறை - உங்கள் மருத்துவம் வேலை செய்ய வில்லை என்று அவர் பலரிடம் கூற வாய்ப்பு உள்ளது. எனவே உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
உஷ்ணத்தை அதிகரிக்க வேண்டுமா? சிகிச்சைக்கு ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன் இரண்டு கப் மிளகு ரசம் குடித்து விட்டு வர சொல்லுங்கள். குளிர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? மாதுளம் பழச்சாறு அருந்தியபின் வர சொல்லுங்கள். இப்படி உணவு உங்கள் சிகிச்சைக்கு உதவுமாறு பார்த்து கொள்ளுங்கள்.
உணவு சக்தியை பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

- முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
- உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
- உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
கழிபேர் இரையான்கண் நோய்.
- அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
நோயள வின்றிப் படும்.
- பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.
மருத்துவம் படிக்கலாம் என்று வந்தால் உணவை பற்றி பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம்... நமது உடலுக்கு வரும் சக்திகளில் பெரும்பாலான சக்தி உணவில் இருந்தே வருகிறது. எனவே உணவை முதன்மை படுத்துகிறேன். உங்களிடம் சிகிச்சைக்கு வரும் நபரின் உணவு பழக்கங்கள் உங்களின் சிகிச்சையை நிச்சயம் பாதிக்கும். நீங்கள் அவரின் உடலில் உஷ்ண சக்தியை அதிகரிக்க முயலும்போது அவர் உணவு குளிர்ச்சியை விளைவிப்பதாக இருந்தால் உங்கள் சிகிச்சை பலன் தராது. இதனால் நோயாளிக்கு பலன் இல்லை என்பது ஒரு குறையாக தெரிந்தாலும் அதை விட மிகப் பெரிய குறை - உங்கள் மருத்துவம் வேலை செய்ய வில்லை என்று அவர் பலரிடம் கூற வாய்ப்பு உள்ளது. எனவே உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
உஷ்ணத்தை அதிகரிக்க வேண்டுமா? சிகிச்சைக்கு ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன் இரண்டு கப் மிளகு ரசம் குடித்து விட்டு வர சொல்லுங்கள். குளிர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? மாதுளம் பழச்சாறு அருந்தியபின் வர சொல்லுங்கள். இப்படி உணவு உங்கள் சிகிச்சைக்கு உதவுமாறு பார்த்து கொள்ளுங்கள்.
உணவு சக்தியை பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
No comments:
Post a Comment