Monday, July 6, 2015

நாடு முன்னேறுதா?

இந்திய தரகு முதலாளிகளில் சிலர் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிற அதே நேரத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது. இப்படி இந்தியா முதலாளிகளின் இந்தியாவாகவும், ஏழைகளின் இந்தியாவாகவும் பிரிந்திருப்பதை எள்ளலுடன் உணர்த்துகிறது இந்தப்பாடல். முன்னுரையுடன் இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள்.

இந்த பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்

நாடு முன்னேறுதுங்குறான் – அட
மினு மினு மினுக்கா, ஜிலு ஜிலு ஜிலுக்கா
ஜெர்மன், அமெரிக்கா, ஜப்பானு கணக்கா
நாடு நம்ம நாடு முன்னேறுதுங்குறான்
தாகம்தீர கொக்கோ கோலா
போதை ஏற ஃபாரின் சீசா
மிக்சு பண்ணிக்கோ பெப்சி லெகரு
மிச்ச வேளைக்கெல்லாம் மினரல் வாட்டரு
குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு
அட்றா செருப்பால வீங்கிப்புடும் செவுளு
( நாடு….)
டீ.வியில் சிரிக்குது காம்ப்ளான் கேர்ளு – டாக்டர்
தினம் தரச்சொல்லுறான் பழம் முட்டைப் பாலு
வகை தெரியாமத் தின்னு அவன் புள்ள வீங்குது – வெறும்
விளம்பரத்தைப் பாத்தே நம்ம புள்ள ஏங்குது
சத்துணவு தீந்துடுன்னு தட்டோட ஓடுது – இவன்
தட்டுகெட்ட திட்டமெல்லாம் என்ன புடுங்குது
( நாடு…)
காலக் காப்பிக்கு மீனம்பாக்கம்
கக்கூசுக்குப் போறான் லண்டன் மாநகரம்
ஈசலாட்டம் தனியார் விமானம் – இதுக்கு
போலீசு கொடை ஒன்னு வேணும்
பேஞ்ச மழையில் எங்க ரோட்டையே காணோம் – பெருசா
பேச வந்துபுட்டான் தேச முன்னேற்றம்
( நாடு…)
பள்ளிக்கூடம்னு போர்டு தொங்குது
பாத்தா மூணு சுவருதான் நிக்குது
பசங்களெல்லாம் மரத்துல தொங்குது
பாடம் நடத்துற டீச்சரு தூங்குது
காசுக்காரன் புள்ள கான்வென்டு போகுது – நம்ம
கார்ப்பரேசன் பள்ளியில சரக்குத்தான் ஓடுது
( நாடு…)
அரசு மருத்துவமனைங்க இருக்குது
ஆரம்ப வியாதியே அங்கதான் தொத்துது
ஆப்பரேஷனுன்னு வச்சுருக்கான் பேரு
அறுத்துப் போட்டுபுட்டு இல்லேங்குறான் நூலு
காசுக்காரன் கூட்டம் அப்பல்லோ போகுது – நமக்கு
கவர்மண்டு இரக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் பண்ணுது
( நாடு…)
ஏசி கூண்டுக்குள்ள பொம்மை விரைக்குது
தங்க ஊசி சேலை அதன் உடம்பில் மினுக்குது
நல்லி, சாரதாஸ் கல்லா பிதுங்குது
வெள்ள எருமைங்கதான் உள்ளே உலாத்துது
பருத்தி நூலுக்கு கைத்தறி ஏங்குது – எங்க
பட்டினி சாவில் உன் பட்டு மினுக்குது
( நாடு…)
காடு, மரம், கடல், மீனும் தனியாரு
போடு கரண்டு, டெலிபோனும் தனியாரு – அரசு
ஆலைகள் அம்புட்டையும் கட்டிபுட்டான் கூறு – அதை
ஏலம் மூணுதரமுன்னு கூவுறான் சர்க்காரு
நம்ம நாடுன்னு சொல்லிக்கிற மிச்சமென்ன கூறு
இவன் ஆடுகிற ஆட்டுறவன் காட்டு தர்பாரு
( நாடு…)

No comments:

Post a Comment