Friday, September 2, 2016

THE NEXT SCARE - ZIKA

Get ready for another scare tactic by the fraudulent pharma company controlled sham that is commonly known as western medicine.

They have tried all sorts of scares on us. Does anyone remember the heydays when aids was proclaimed as a life killer that could wipe out the entire human race? Ebola - Avian Flu - SARS - Monkey flu - Swine Flu - chickengunya and now comes ZIKA!!!!

Infection with the Zika virus is rarely severe enough to warrant hospitalization, and it is rarer still for an individual to die as a result. (Source : http://www.medicalnewstoday.com/articles/305163.php )

Most people infected with Zika virus won't even know they have the disease because they won't have symptoms... The illness is usually mild with symptoms lasting for several days to a week. People usually don't get sick enough to go to the hospital, and they very rarely die of Zika. For this reason, many people might not realize they have been infected... Once a person has been infected, he or she is likely to be protected from future infections. (CDC's Zika page)

Thus, even according to the Centre for Disease Control - Zika is no big deal.


There is no correlation between zika virus and microcephaly (a condition in which the baby has a smaller head) It has been proven that microcephaly is caused more by insecticides. These days there is a lot of attention towards organic farming and healthy living. But we have companies which have produced pesticides and chemicals that are lying idle in warehouses - What better way than to evoke a fear and then use the government to buy all these pesticides to "Clean water bodies"!!!


Spreading fear about viruses is so effective - profits in billions - that the governments and health "authorities" of the world roll out the same scam every few years... and people fall for it every time!

Remember the great Swine Flu hoax?


The great swine flu hoax of 2009 is now falling apart at the seams as one country after another unloads hundreds of millions of doses of unused swine flu vaccines. No informed person wants the injection anymore, and the entire fear-based campaign to promote the vaccines has now been exposed as outright quackery and propaganda.

Even doctors are now calling the pandemic a complete hoax. As reported on FoxNews, Dr. Wolfgang Wodarg, a leading health authority in Europe, says that drug companies "organized a 'campaign of panic' to put pressure on the World Health Organization (WHO) to declare a pandemic. He believes it is 'one of the greatest medicine scandals of the century,' and he has called for an inquiry."


Not only does Zika fear allow governments to funnel money to vaccine companies and legalize more chemical insecticides; it also justifies their release of genetically modified mosquitoes into the wild (with unknown future consequences).

It's all part of the total destruction of the ecosystem that has been systematically planned and carried out by the globalists governments of the world.

What you're NOT being told is that the epicenter of the Zika virus spread is precisely where GM mosquitoes were released last year.

Oxitec, a company that calls itself "... a pioneer in controlling insects that spread disease and damage crops," unveiled its GM mosquito farm in Brazil in July 2012. Its goal was to reduce dengue fever, a disease which is spread by the Aedes mosquitoes which also spread the Zika virus. Then, in 2015, these GM mosquitoes were released into the wild in Brazil. In July that same year, the release was declared a success by the company, who noted that they'd been able to control the Aedes aegypti mosquito that spreads dengue fever, chikungunya ... and the Zika virus. However, in October, people in the general area where the mosquitoes were released began to experience illnesses related to the Zika virus at alarmingly fast rates.
It's the PERFECT MEDICAL SCAM: Spraying more chemicals will cause more deformed babies, resulting in an even greater cry for more vaccines and more chemical spraying... and the cycle repeats
It's the perfect medical scam! Zika is spread by the very things that we're all told are trying to stop Zika, and as the problem gets worse, all the chemical spraying and vaccines get ramped up to insane levels, causing even more insane levels of Zika virus.

It's just like flu shots: They spread the flu, causing more influenza outbreaks, panicking more people into getting more flu shots. And the cycle repeats. It's the greatest medical scam of all time: Make sure the treatments CAUSE the problem they claim to prevent!

Why do you think chemotherapy causes cancer? Why do you think antidepressant drugs cause depression? Why do you think flu shots spread the flu?

It's all by design, folks. And Zika is just the latest chapter of this massive quack science scam being carried out as global medical theater to control the masses.

You are all being played, Orwellian style, under the guise of "public health."




Saturday, August 20, 2016

பால் பால்தானா?

யாராவது விவரம் தெரிஞ்சவங்க இது சரியா இல்லையான்னு சொல்லுங்க. ப்ளீஸ்.
///வெள்ளை விஷம் ...
நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..
ரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்..
" முன்பெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய ... பசும்பாலுடன் எருமை பாலை கலந்து விற்பது சாதாரணமாக நடக்க கூடியது. கூடிப் போனா தண்ணீர் கலப்பார்கள்..
மக்கள் தொகை குறைவாக இருந்த அந்த காலங்களில் கூட காலை, மாலை இரு வேளைகளில் தான் பால் கிடைக்கும். ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் .. கோனார்களிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும். சில வேளைகளில் பாலுக்கான Demand மிக அதிகமாக இருக்கும்.. குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை என்றால் நிறைய பால் பௌடர்கள் புழக்கத்தில் இருந்தன..
ஆனால் இப்போ நிலைமை வேறு.. எல்லா இடமும் அபார்ட்மெண்ட் வீடுகள் .. மேய்ச்சல் நிலம் எல்லாம் கான்க்ரீட் மயம்..விவசாய குடும்பங்களே மாடு வளர்ப்பதில்லை... என்னதான் வெண்மை புரட்சி , ஜெர்ஸி பசுக்கள், முர்ரா எருமைகள் என்றாலும் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு 24 X 7 பால் பாக்கெட் கிடைக்கிறது என்றால் logic இடிக்குதே.. கண்ணு போட்டா தானே மாடு பால் தரும். அவ்வளவு கண்ணு இருந்தா மாடுகள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கணுமே ... எப்படிங்க இவ்வளவு பால் கிடைக்குது ???
"" தம்பி.. நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க.. எல்லாம் 20:50:30 தான்.."
"அப்படின்னா "
" 20 % தாங்க மாட்டு பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் factory இருக்குதே .. தெரியாதா??.. இருக்குற மாடுகளை வச்சிட்டு மாட்டு பால் மட்டும் கொடுத்தா ஆளுக்கு ஒரு ஸ்பூன் பால் கூட கிடைக்காது.. நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பனும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்??"
எந்த தண்ணிய ஊத்துவீங்க ...
ஹி .. ஹி .. ஊருணி, குளம் , கம்மா தண்ணி தான்.. பின்ன Aquafina வாங்கியா ஊத்த முடியும்..
இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ??
பாப்பாங்க ..
அப்புறம்
பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட் எல்லாம் பண்ராங்க இப்ப....
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??
அப்படி சொல்ல முடியாது..
அதெல்லாம் ratio கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவு தான்.. ஆனா மாட்டு பால் 20% - 30% தான் தம்பி.. அது போக detergent, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ ..
சின்ன புள்ளைங்க இந்த பாலை குடிச்சு ... யோவ் .. சோயாக்கே நிறைய side effects இருக்குய்யா .. கொஞ்சம் கூடுச்சின்னா ஆஸ்த்மா .. அலர்ஜி .. Erectile dysfunction, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு ஹார்மோன் imbalance ..
அதுக்கு ...??
அப்புறம் நாங்க சுத்தமான பசும் பால் சாப்பிடணும்னா ??
நீங்க தான் பசு மாடு வளர்க்கணும்..
சரி.. இதுக்கே இப்படி சொல்றீங்களே.. வெள்ளி செவ்வாய்க்கு கடை வாசல்கள்ல உடைக்கிற தேங்காய்களை அள்ளி ஹோட்டல்களுக்கு தர்ற கான்ட்ராக்ட் ., பெரிய ஹோட்டல்கள்ல ஓரு தடவை பூரி சுட்ட எண்ணெய் வாங்கி ரோட்டு கடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட், கோழி கடைகள்ல மிச்சமாகிற தலை, குடல் வாங்கி சால்னா கடைகளுக்கு கொடுக்குற கான்ட்ராக்ட் , கிராமங்கள்ல நோய்வாய் பட்ட ஆடுகளை சல்லிசா வாங்கி கறிகடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட் ... இப்படி நிறைய இருக்கு தம்பி.. முன்னாடில்லாம் ஊர்ல ஒருத்தன் ரெண்டு பேருக்கு கேன்சர் வரும்.. இப்போ ஒவ்வொரு பெரிய ஆசுபத்திரிலேயும் போய் பாருங்க .. எத்தனை பேரு... நான் முன்னாடி சாமி கும்பிட மாட்டேன் .. தி க குடும்பம் தம்பி.. இப்போ நான் கும்பிடாத கடவுள் இல்ல.. பயம் தம்பி...." ///இதுக்கு பேசாம புண்ணாக்கும் கழனி தண்ணியும் குடிச்சி பொழச்சிக்கிடலாம்!

Sunday, August 14, 2016

ஆறறிவதுவே அதனொடு மனமே

சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில்,  'அம்மா’ என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே, 'ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!’ என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை.

'வானம் வடக்கே கருக்கலா இருக்கு மழை வருமாட்டு இருக்கு மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’ என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை.

'ஆடிப் பட்டம் தேடி விதை’ என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை.

'மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ எனப் பாடிய தேரன் சித்தர் மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை.

'செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்’ எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு, 60 ஆடுகளில் இரண்டை மட் டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்? அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்? இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?  ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு. வள்ளுவன் சொல்லும் மெய்ப்பொருள் காணும் அறிவும், பாரதி சொன்ன விட்டு விடுதலையாயிருந்த மனமும் சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்துவருகிறோம்.

'மம்மி எனக்கு வொயிட் சட்னிதான் வேணும், க்ரீன் சட்னி வைக்காதே சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது, 'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், 'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’ எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது. ஏனென்றால், சொல்லித் தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை. இந்த மௌனங்களும் அவசரங்களும் தொலைத்தவைதான் அந்த அனுபவப் பாடம்!

தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து 'புரோட்டின், கலோரி, விட்டமின்’ பற்றிய ஞானம் பெருகிய அளவுக்கு,  'கொள்ளும் கோழிக் கறியும் உடம்புக்குச் சூடு; எள்ளும் சுரைக் காயும் குளிர்ச்சி. பலாப் பழம் மாந்தம். பச்சைப் பழம் கபம். புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்’ என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

'அதென்ன சூடு, குளிர்ச்சி? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது இந்த தெர்மாமீட்டர்ல உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம் தோற்றுவிட்ட அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை, வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு?
'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’ எனும் அம்மா, 'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’ என்று அக்கறை காட்டும் அப்பா.

'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’ என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.

'வயிறு உப்புசமா இருக்கா? மாந்தமாயிருக்கும் கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணிவிட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’ என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.

ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது, வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.

'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே? குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக் கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.

வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற  பொருள் நச்சுத்தன்மைக்கொண்டது என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக் கருக்கும்போது அந்த அசரோன்காணாமல் போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.

பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா? 'பிள்ளை-வளர்ப்பான்’!

'சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க. மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;

மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா? ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;

வாய்ப் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;

பித்தக் கிறுகிறுப்புக்கு முருங்கைக்காய் சூப்,
மூட்டு வலிக்கு முடக்கத் தான் அடை,
மாதவிடாய் வலிக்கு உளுத்தங்களி,
குழந்தை கால்வலிக்கு ராகிப் புட்டு,
வயசுப் பெண் சோகைக்குக் கம்பஞ்சோறு,
வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு வாழைத்தண்டுப் பச்சடி’ என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும் சில நேரம் மருந்துகள்; பல நேரம் மருத்துவ உணவுகள்.

காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி.

சுழியத்தைக் (ஜீரோவை) கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.

'பை’ என்றால் 22/7 என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

'ஆறறிவதுவே அதனொடு மனமே’ என மனதின் முதல் சூத்திரத்தை சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு 40 தலைமுறைகள் முன்பே சொன்ன தொல் காப்பியம் எழுதிய ஊர் இது.

இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?

சிறந்த பாடமாகக்கருதி பகிரவும். கொண்டுசேர்க்கவும்.

Monday, July 25, 2016

நிலக்கடலை .நிலக்கடலை.

இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது .

மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.

எனவே அமெரிக்கா இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.

இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.


கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது.
இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதியும் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.


பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.
இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. 


பெண் களுக்கு பெரிதும் தேவையான போலிக்அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் மற்றும் போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.


நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம்.. அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. 


நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.


நாகரீகம் பகுத்தறிவு என்ற பெயரில் படிக்காதவர்களை விட படித்தவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்பதை பிற நாடுகள் இன்றும் நம்மிடம் நிரூபித்துகொண்டிருகிறன 

2% is the cancer cure rate for western medicine. If you do nothing, 27% will get cured!!!!

Can you believe this statistic? IT IS TRUE

All oncology units and cancer cure centers have an abysmal rate of curing cancer.

Chemo is only 2.1% effective toward 5 year survival


- It causes permanent damage throughout the body
-It destroys your immune system, which is the most critical component in getting well.
-It is a highly toxic carcinogen that can cause secondary cancers throughout the body.
-The reports of its effectiveness are grossly exaggerated.
A groundbreaking 14 year study was published in the Journal of Clinical Oncology in December 2004 called “The Contribution of Cytotoxic Chemotherapy to 5-year Survival in Adult Malignancies”.
Researchers at the Department of Radiation Oncology at the Northern Sydney Cancer Centre studied the 5-year survival rates of chemotherapy on 22 types of cancers in the US and Australia.
They studied 154,971 Americans and Australians with cancer, age 20 and older, that were treated with conventional treatments, including chemotherapy.
Only 3,306 had survival that could be credited to chemotherapy.
Study Results: “The overall contribution of curative and adjuvant cytotoxic chemotherapy to 5-year survival in adults was estimated to be 2.3% in Australia and 2.1 % in The USA”

Sunday, July 24, 2016

மருத்துவம் தெரியாது

எங்களுக்கு மருத்துவம் தெரியாது!

கர்ப்பகாலத்தை நோயுற்றகாலமாக மாற்றி பிரசவத்திற்கு பின் தாயையும்,சேயையும் நிரந்தர நோயாளிகளாக ஆக்குவதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

தடுப்பூசி என்ற பெயரில் நோய்கிருமிகளையும், இருப்பு ரசாயனங்களையும் உடலில் செலுத்துவதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

நுரையீரலில் தங்கிய கழிவை,சளியாக மாற்றி உடல் வெளியேற்ற முயற்சிப்பதை ரசாயனமருந்துகளை கொடுத்து அந்த கழிவை தேங்கவைத்து நாள்பட்ட நோய்களாக மாற்றுவதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

ஆண்டிப்பட்டி மனிதருக்கும்,அமெரிக்க மனிதருக்கும்,
சைவ உணவு சாப்பிடுபவருக்கும்,அசைவ உணவு சாப்பிடுபவருக்கும், வெய்யிலில் கடினமாக உழைப்பவருக்கும், ஏ.சியில் சொகுசாக அமர்ந்திருப்பவருக்கும் இரத்தத்தில்சர்க்கரையும், இருதயத்தில் அழுத்தமும் இன்னும் பிறவும் சராசரியாக இவ்வளவுதான் இருக்கவேண்டும், எல்லோரும்ம் சராசரியாக இவ்வளவுதான் நீர் பருக வேண்டும். எல்லோரும் சராசரியாக இவ்வளவுதான் உண்ண வேண்டும் என சராசரிபட்டியல் நீட்டுவது மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

எந்த நோயையும் குணபடுத்த முடியாது, கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்க முடியும் என்பதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

கழிவுகளின் தேக்கத்தால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை சரிசெய்ய வழிதெரியாமல் அந்த உறுப்பையே அறுத்து எறிவதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

ஒரு உயிரை கொலை செய்து உடல் உறுப்புகளை களவாடி விற்பனை செய்து பணம் பறிப்பதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு கைக்கூலியாய் செயல்பட்டு, தன்னாட்டு மக்களை ஏமாற்றி, பொய்யுரைத்து, இம்சித்து, வேதனைபடுத்தி,செல்வத்தை களவாடுவதுதான் மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

எந்த ஒரு விளைவிற்கும் எதிர்விளைவு இருக்கும்,உண்மைதான்!. ஆனால் அந்த விளைவு(பக்க விளைவு) தீங்காவே இருக்கும்,அதனால் உடலில் புதுப்புது நோய்கள் வரும் என்பது மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

“பிறப்பும்,இறப்பும் நம் கையில் இல்லை” இது ஊரறிந்த உண்மை, ஆனால் மரணத்தை முன்னிறுத்தி விளம்பரங்கள் மூலம் மக்களை பயமுறுத்தி அவர்களை நோயாளி ஆக்குவது மருத்துவம் என்றால், எங்களுக்கு அந்த மருத்துவம் தெரியாது!.

Wednesday, July 13, 2016

மனக்குரங்கு

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பு குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .

குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

கவலைகளை விட்டொழியுங்கள்.
மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

 ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

பசிக்கும் போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.


Sunday, July 10, 2016

கலப்படம்


“நான் சூப்பர் மார்க்கெட்டில்தான் பொருட்களை வாங்குகிறேன். கலப்படம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று சிலர் கூலாகச் சொல்வார்கள். அதிக விலைகொடுத்து வாங்கினால் கலப்படம் இருக்காது என்பதும் பலரின் நம்பிக்கை. உண்மையில் பாலில் தொடங்கி பனீர் வரை  எங்கும் எதிலும் எப்போதும் கலப்படம்தான். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பிராண்டுகளில் சர்வசாதாரணமாகக் கலப்படங்களைச் செய்கிறார்கள் கலப்பட மன்னர்கள். தரம் குறைந்த பொருட்களை வாங்கிவந்து, செயற்கை நிறம் கலந்தும் பாலீஷ் செய்தும் தரமான பொருட்களைப் போல விற்கிறார்கள்.
குறைவான விலை என்பதாலும், நம்மை எல்லாம் ஒன்றும் செய்யாது எனும் அசட்டு நம்பிக்கை காரணமாகவும் கலப்படப் பொருட்கள் விற்பனை எந்தத் தடையும் இன்றி நடந்துகொண்டே இருக்கிறது.
கலப்படம் என்பது, ஆரோக்கியத்தை அசைத்துப்பார்த்து, உயிருக்கே உலைவைத்துவிடும் மரண வியாபாரம். அது ஒரு சமூக அநீதி எனும் புரிதலும் விழிப்புஉணர்வும் விற்பவர்களுக்கும் தேவை. நுகர்வோருக்கும் தேவை.
கலப்படத்தைக் கண்டறிய…
டீ  – கடைகளில் பயன்படுத்திய டீ தூள் கசடை (Tea dust) குறைவான விலைக்கு வாங்கி, அதை வெயிலில் உலர்த்தி, சிவப்பு நிறம் சேர்த்து விற்கின்றனர். குறைவான விலையில் கிடைக்கும் டீ தூள்களில், இந்த சிவப்பு நிறம் கலக்கப்படுகிறது. சாதாரண ஃபில்டர் பேப்பரில் டீ தூளைக் கொட்டி, நான்கு துளிகள் நீர் விட்டால், சிவப்பு நிறம் தனியே பிரிவது தெரியும். குறிப்பாக, ஊர்களை மையப்படுத்தி விற்கும் ஸ்பெஷல் டீ தூள்கள் பெரும்பாலும் கலப்படங்களே.
கடுகு – தரமான கடுகை, கைகளில் வைத்து அழுத்திப்பார்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருக்கும். கசகசா வகையைச் சார்ந்த அர்ஜிமோன் விதைகள் கலக்கப்பட்டிருந்தால், கைகளில் நசுங்கும்போது, அதன் உட்புறம் வெள்ளையாக இருக்கும்.
மஞ்சள் தூள் – மஞ்சள் தூளில், ஸ்டார்ச் பவுடர் மற்றும் மெட்டானில் எல்லோ எனும் ரசாயனம்  கலக்கப்படுகின்றன. அரை ஸ்பூன் மஞ்சள்தூளை, 20 மி.லி இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் இரண்டு துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்க வேண்டும். இளம் சிவப்பு, ஊதா நிறத்தில் நீர் மாறினால், அதில் மெட்டானில் எல்லோ கலந்திருப்பதை உறுதி செய்யலாம்.
பச்சைமிளகாய், பச்சைப் பட்டாணி – பச்சைமிளகாய், குடமிளகாய் போன்றவை அதிகப் பச்சையாகத் தெரிவதற்காக, மாலசைட் கிரீன் (Malachite green) எனும் ரசாயனத்தில் முக்கி விற்கப்படுகின்றன. இதேபோல, உலர் பட்டாணி ஊறவைக்கப்பட்டு, மாலசைட் கிரீன் கலந்து ஃப்ரெஷ்ஷாக இருப்பதுபோல் விற்கப்படுகிறது. இவற்றை வெந்நீரில் போட்டதும் பச்சை நிறம் வெளியேறினால், அதில் மாலசைட் கிரீன் கலந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
பட்டை – பட்டையில், கேசியா (Casia), சுருள் பட்டை (Cinnamon) எனும் இரு வகைகள் உள்ளன. இதில், சுருள் பட்டையில்தான் சத்துக்கள் உள்ளன. கேசியா பட்டையில் சாதாரண மரப்பட்டைகள் நிறம் சேர்த்துக் கலக்கப்
படுகின்றன. ஓரிரண்டு  பட்டையைக் கசக்கிப் பார்த்தால், கைகளில் எந்த நிறமும் ஒட்டக் கூடாது.
மிளகு – பப்பாளி விதைகளைக் காயவைத்தால், மிளகு போலத் தெரியும். அதை, மிளகில் சேர்த்து விற்கின்றனர். அதேபோல, பழைய மிளகில் மினரல் ஆயில் எனப்படும் பெட்ரோலியப் பொருள் கலக்கப்பட்டு, மெருகேற்றப்படுகிறது. மிளகு பார்ப்பதற்குப் பளபளப்புடன் மின்னக் கூடாது. முகர்ந்துபார்த்தால்  கெரசின் வாடை  அடிக்கக் கூடாது. கண்ணாடி டம்ளரில் 50 மி.லி தண்ணீரை ஊற்றி, அதில் மிளகைப் போட வேண்டும். மூழ்கினால் அது உண்மையான மிளகு, மிதந்தால் அது பப்பாளி விதை.
சீரகம் – சீரகத்தில், குதிரைச் சாணம் சேர்க்கப்படுகிறது. தவிர, அடுப்புக் கரியும் சேர்க்கின்றனர். சீரகத்தைத் தண்ணீரில் போட்டால், சாணம் கரைந்துவிடும். சீரகத்தைக் கையில் வைத்துத் தேய்க்கும்போது, கறுப்பாக மாறினால், அதில் அடுப்புக் கரி சேர்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சீரகம் போன்ற தோற்றம்கொண்ட ‘சதகுப்ப’ எனும் பொருளையும் சேர்த்து விற்பனை செய்கின்றனர். இதைப் பரிசோதனைக்கூடத்தில் மட்டுமே கண்டறிய முடியும்.
டீலக்ஸ் தனியா – தனியா அடர்பழுப்பாக இருக்கும். ஆனால், டீலக்ஸ் தனியா என்பதை வெள்ளையாக மாற்ற, சல்பர் டை ஆக்சைட் சேர்க்கப்படுகிறது. வெள்ளையாக்கப்பட்ட தனியாவைத் தவிர்த்துவிடலாம். அதுபோல, ஒரு ஸ்பூன் தனியா தூளில் தண்ணீர் விடும்போது, மேலாக தூசு போல படிந்தால் அதில் மரத் தூள் கலந்திருக்கலாம்.
ஜவ்வரிசி – மஞ்சள் நிறமாக இருக்கும் ஜவ்வரிசி டினோபால் போன்ற, பளீர் வெள்ளை நிறத்தைத் தரும் ரசாயனங்களால் தீட்டப்
படுகிறது. சிறிது மஞ்சளாக இருக்கும் ஜவ்வரிசியைப் பயன்படுத்துங்கள்.
பால் – அதிகாலை கறக்கும் பால் சில்லிங் சென்டருக்கு போகும் வரையில் கெட்டுப்போகாமல் இருக்க, யூரியா, காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. பாலையும் தண்ணீரையும் 10 மி.லி அளவில் சமமாகக் கலக்கும்போது, நுரை வந்தால் அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்கலாம். மேலும், அருகில் விற்கும் பால்காரரிடம் பால் வாங்குவதே கலப்படங்களிலிருந்து தப்பிக்க எளிய வழி.
மிளகாய்த் தூள் – இதில், புற்றுநோயை உண்டாக்கும் சூடான் டை கலக்கப்படுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூளைக் கலக்குங்கள். அதில் பளீர் சிவப்பு வண்ணம் வெளிவந்தால், அதில் சிவப்பு வண்ணம் கலந்திருக்கலாம்.
தேங்காய் எண்ணெய் – தேங்காய் எண்ணெயைக் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வையுங்கள். தடிமனான திக்கான படிமம் எண்ணெயின் மேல் படிந்தால், அது சுத்தமான தேங்காய் எண்ணெய். நீர்த்த நிலையில் அப்படியே இருந்தால், அதில் மலிவான எண்ணெய்கள் கலக்கப்பட்டிருக்கின்றன.

தேன் – பஞ்சைத் தேனில் நனைத்து, நெருப்பில் காட்டும்போது, பஞ்சு எரிந்தால் நல்ல தேன். எரியும்போது சடசடவென சத்தம் வந்தால், அது கலப்படத் தேன். தேனைத் தண்ணீரில் விட்டால், கரையாமல் அடி வரை சென்று தங்கும். கரைந்தால், அது வெல்லப்பாகு.
காபி பொடி – ஒரு கிளாஸ் தண்ணீரில் காபி பொடியைப் போட்டதும், காபி பொடி மேலே மிதக்கும். சிக்கரி கலந்திருந்தால், நீரில் மூழ்கும்.
எண்ணெய் – எண்ணெயை ரீஃபைண்ட் செய்ய, பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தலாம். எண்ணெயில், 20 சதவிகிதம் அளவுக்கு வேறு ஒரு எண்ணெயைக் கலக்கலாம். அரசின் இந்த அனுமதி, பல கலப்படங்களுக்குக் காரணமாக இருக்கிறது.
தோசை மாவு – மாவு புளிக்காமல் இருக்க, கால்சியம் சிலிகேட் சேர்க்கப்படுகிறது. இதில் சுகாதாரமற்ற தண்ணீர் சேர்ப்பதால் இ-கோலை பாக்டீரியா (மலக்கழிவில் இருக்கும் கிருமி) இருக்கும். பல நோய்களை உருவாக்கும் கிருமி இது. எனவே, வீட்டில் மாவு அரைத்துச் சாப்பிடுவதே நல்லது.
பனீர் – ஒரு கப் தண்ணீரில் ஒரு பனீர் துண்டைப் போட்டுக் கொதிக்கவிடுங்கள். ஆறியதும், சில துளிகள் அயோடின் சொல்யூஷன் கலக்கவும். பனீர் நீல நிறமாக மாறினால், அது கலப்படம். பனீர் தயாரிக்கப்பட்ட பாலில் கஞ்சி, மாவுப் பொருட்கள் (Starch) கலந்திருக்கலாம்.
நெய் – வனஸ்பதி அல்லது வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு கலந்திருக்கும். இதைப் பரிசோதனை மையங்களில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெண்ணெயை வாங்கிக் காய்ச்சுவது நல்லது.
யாரிடம் புகார் செய்யலாம்?
தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் உள்ளன. வாங்கும் பொருட்களால், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அந்த ஊரில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். எந்தப் பொருளால் உடல்நலக் கேடு ஏற்பட்டதோ, அந்த இடத்துக்குச் சென்று, அந்த உணவின் சாம்பிளைப் பரிசோதனை செய்வர். ரிப்போர்ட்டில் கலப்படம் எனத் தெரிந்தால், விற்றவர் மற்றும் தயாரித்தவர் மேல் வழக்குப் போடப்படும். பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமும் பரிசோதனைக்குச் செலவான பணமும் திரும்ப வழங்கப்படும். நுகர்வோருக்கு உண்டான அலைச்சல், மன உளைச்சலுக்குத் தகுந்த தொகை தரப்படும்.
பாதிப்புகள்
உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் அனுமதிக்கப்படாத வண்ணங்கள் புற்றுநோய்க்குக் காரணமாகலாம். அர்ஜிமோன் விதைகள், பெட்ரோலிய பொருளான மினரல் ஆயில் போன்றவையும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதே. ஆப்பிள் மேல் பூசப்படும் மெழுகில் ‘லெட்’ இருக்கிறது. இது வாந்தி, வயிற்றுப்போக்கில் தொடங்கி நரம்பு மண்டலத்தையே பாதிக்கலாம். உணவால் ஏற்படும் கழிவுகளைச் சிறுநீரகமும் கல்லீரலும் சுத்தம் செய்கின்றன. வீரியமுள்ள ரசாயனங்களால் இந்த இரண்டு உறுப்புகளும் பாதித்து, செயலிழந்து போக நேரிடும். எப்போதோ ஓரிரு முறை கலப்பட உணவுகளைச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. மாதங்கள், ஆண்டுகள் எனத் தொடர்ந்து சாப்பிடும்போது, உடல்நலம் கெடுவது உறுதி. உடலை உருக்குலைக்கும் நோய்களுக்கான வாசலும் இதுவே.
:)