Monday, January 2, 2017

வர்ம அறிவியல் - 1

இறைவன் ஆன்மாவை இயக்குகிறார்
ஆன்மா புத்தியை இயக்குகிறது
புத்தி மனதை  இயக்குகிறது
மனம் நரம்புகளை இயக்குகிறது
நரம்புகள் பொறிகளை இயக்குகின்றன.

இவ்வாறு பொறிகளை இயக்கும் நரம்புகளில் உள்ள சூட்சும புள்ளிகளை பற்றி படிக்கும் அறிவியல்தான் வர்ம அறிவியல்.

மூளையில் இருந்து 12 இணை நரம்புகள் பிரிந்து செல்கின்றன. (கபால நரம்புகள் - cranial nerves) ஒவ்வொன்றிலும் 9 புள்ளிகளில் உயிர் செறிந்து உள்ளது. இவற்றையே வர்ம புள்ளிகள் என்கிறோம். இந்த 9 புள்ளிகளில் 1 புள்ளியில் உயிர் சற்றே மிகுந்து காணப்படுகிறது - இந்த புள்ளியை படு வர்ம புள்ளி என்கிறோம். மற்ற 8 புள்ளிகளை தொடு வர்ம புள்ளிகள் என்கிறோம்.

ஆக 
12 x 8 = 96 தொடு வர்ம புள்ளிகளும்

12 x 1 = 12 படு வர்ம புள்ளிகளும் உள்ளன.

இந்த 12 நரம்புகள் என்னென்ன?

1. மோப்ப நரம்பு - OLFACTORY NERVE
2. பார்வை நரம்பு - OPTIC NERVE
3. கண்ணுருட்டி நரம்பு - OCULOMOTOR NERVE
4. கவி நரம்பு - TROCHLEAR NERVE
5. மும்முகி நரம்பு -  TRIGEMINAL NERVE
6. கடாட்ச நரம்பு - ABDUCENS NERVE
7. முக நரம்பு - FACIAL NERVE
8. கேள்வி/செவி நரம்பு - AUDITORY NERVE
9. நாத்தொண்டை நரம்பு - GLOSSOPHARYNGEAL NERVE
10. உரோதரி நரம்பு -  VAGUS NERVE
11. உப உரோதரி நரம்பு - SPINAL ACCESSORY NERVE
12. நாக்கீழ் நரம்பு - HYPOGLOSSAL NERVE


No comments:

Post a Comment