Monday, January 2, 2017

பாடம் 2

இப்படி ஒரு உலகை கற்பனை செய்து பாருங்கள்.

1. இருதய நோய், சர்க்கரை நோய் இல்லாத அல்லது குறைவான அளவு உள்ள உலகம்.

2. எல்லோருமே ஒல்லியாகவும் சக்தி நிறைந்தவர்களாகவும் உள்ள உலகம்.

3. பருவம் அடைந்ததில் இருந்து


உணவு செரித்த பின் நமக்கு கிடைப்பது உணவு சக்தி. இது சரியாக கிடைத்தால் நாம் மற்ற சக்திகளையும் பெற முடியும். இது சரியாக கிடைக்கா விட்டால் மற்ற சக்திகளிலும் பாதிப்பு ஏற்படும்.  எனவே எவ்வாறு உணவு சக்தியை முறையாக பெறுவது என்பது பற்றி பார்ப்போம்.

உணவின் செயல்பாடு:

இரண்டில் இருந்து ஐந்து கிலோ எடையோடு பிறந்த இந்த உடல் ஐம்பதில் இருந்து நூறு கிலோ எடை உள்ளதாக  மாறுவதற்கு உதவுவது உணவுதான் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பு இல்லை.  இவ்வளவு முக்கியமான ஒரு விஷயத்தை நம் முன்னோர்கள் உணர்ந்துதான் உணவை முதன்மை படுத்தினார்கள். உணவை வெறும் உண்ணும் விஷயமாக பார்க்காமல் உணவை மருந்தாகவே பார்த்தார்கள்... "உணவே மருந்து" என்னும் அவர்கள் வாழ்க்கை நெறி நமக்கு எல்லாம் ஒரு முன் உதாரணம் - ஆனால் மேற்கத்திய மோகத்தில் மூழ்கிவிட்ட இந்த தலைமுறை ஆரோக்கியமான உணவை பற்றி கவலை படுவதாக தெரியவில்லை. இவர்கள் எல்லாம் ஆரோக்கியமான உணவை கேட்க தொடங்கிவிட்டால் பல பன்னாட்டு உணவகங்கள் படுத்துவிடும்... இங்குள்ள உணவகங்களும் ஒழுங்கான உணவை அளிக்க முன் வரும். மக்கள் ஆரோக்கியத்தில் அரசும்  மெத்தனமாக இருப்பது கவலை அளிக்கிறது. ஒவ்வாத உணவை பல மடங்கு விலையில் விற்று நம்மை நோயாளிகளாக்கும் நிறுவனங்கள் அல்லது நாடுகள், நமக்கு மருந்தையும் பல மடங்கு விலையில் விற்று லாபம் பார்த்து விடுகிறார்கள்... இதுதான் நவீன காலனி ஆதிக்கத்தின் "  பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது" என்பது.

எதை உண்கிறோமோ அதைச் சார்ந்துதான் நமது உணர்வுகளும், தோற்றமும், செயல்பாடும் இருக்கும். 

No comments:

Post a Comment