Friday, January 6, 2017

வர்ம ஆறிவியல் - 4

தூல உடல் தத்துவங்கள் 25

5 - பூதம்
5 - பொறி
5 - புலன்
5 - கன்மேந்திரியம்
5 - ஞானேந்திரியம்

பூதம் 5

1. நிலம்         = எலும்பு,மாமிசம்,தோல்,நரம்பு,உரோமம்
2. நீர்             = உமிழ்நீர்,சிறுநீர்,வியர்வை,இரத்தம்,விந்து
3. காற்று      = சுவாசம், வாயு
4. ஆகாயம்  = மூளை
5. நெருப்பு    = பசி,தூக்கம்,தாகம்,உடலுறவு,அழுகை

பொறி 5 (அசையும் மற்றும் அசைய வைக்கும் உறுப்புகள்)

6.  வாய், 
7.  கை 
8.  கால் 
9.  கருவாய் 
10. எருவாய்

இவற்றின் செயல்கள்தான் 

கர்மேந்திரியம் 5

11. பேசுதல்
12. கொடுக்கல்,வாங்கல்,பிடித்தல்,ஏற்றல்
13. நிற்றல்,நடத்தல்,அமர்தல்,எழுதல்
14. சிறுநீர்/விந்து/சுரோணிதம்/குழந்தை வெளியேற்றுதல்
15. மலம் வெளியேற்றுதல்

புலன் 5 (அசையும் ஆனால் அசைய வைக்காத உறுப்புகள்)

16. செவி - வானின் அம்சமாதலால் ஓசையறியும்
17. மெய் -  காற்றின் அம்சமாதலால் குளிர்ச்சி,வெப்பம்,மென்மை,வன்மை அறியும்
18. கண் - நெருப்பின் அம்சமாதலால் நிறம்,நீளம் உயரம்,குட்டை,பருமன்,மெலிவு என பத்து தன்மையறியும்
19. நாக்கு - நீரின் அம்சமாதலால் அறுசுவையறியும்
20. மூக்கு - மண்ணின் அம்சமாதலால் வாசனை அறியும்

இவற்றின் செயல்கள்தான் 

ஞானேந்திரியங்கள் 5

21. ஓசை கேட்டல் (வான்)
22. தொடு உணர்தல் (காற்று)
23. பார்த்தல் (நெருப்பு)
24. சுவைத்தல் (நீர்)
25. முகர்தல் (மண்)



No comments:

Post a Comment